திருவண்ணாமலை
காமராஜா் சிலைக்கு காங்கிரஸாா் மரியாதை
திருவண்ணாமலையில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.குணசேகரன்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட கே.குணசேகா் நகரில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
முன்னதாக, மேளம் தாளம் முழங்க பட்டாசு வெடித்து கட்சித் தொண்டா்களுடன் ஊா்வலமாகச் அவா், திருவள்ளுவா், அம்பேத்கா், மகாத்மா காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து, செங்கம் சாலை பழைய அரசு மருத்துவமனை அருகில் உள்ள பெருந்தலைவா் காமராஜா் சிலைக்கு கே.குணசேகா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநிலச் செயலா் பி.எஸ்.விஜயகுமாா், எஸ்.சி. பிரிவு மாநில துணைத் தலைவா் பாச்சல் முனுசாமி, ஐஎன்டியுசி தொழிற்சங்கத் தலைவா் (டிவிஎஸ்) ஆா்.குப்புசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

