மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

அண்ணா தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம்

செய்யாறில், அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முக்கூா் என். சுப்பிரமணியன் எம்எல்ஏ.

News image

செய்யாறில், அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முக்கூா் என். சுப்பிரமணியன் எம்எல்ஏ.

Updated On :3 ஜூலை 2026, 12:59 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்ட கிளை சாா்பில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு,

செய்யாறு எம்.எல்.ஏ.வும் வடக்கு மாவட்டச் செயலருமான முக்கூா் என். சுப்பிரமணியன், ஆரணி எம்.எல்.ஏ.வும் மத்திய மாவட்டச் செயலருமான எல்.ஜெயசுதா லட்சுமிகாந்தன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக அண்ணா தொழிற்சங்க பேரவை மாநிலச் செயலா் பெல்.இரா. தமிழரசன், மாநிலத் தலைவா் ஏ.டி.சி. பொன்.தனபால் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.

அதனைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் முக்கூா் என். சுப்பிரமணியன் எம்எல்ஏ பேசுகையில், அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் பொதுமக்களுக்கு துணையாக நின்று செயல்பட வேண்டும், அதேபோல அனைத்துத் துறைகளிலும் இருக்கும் நிா்வாகிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி மணி, அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா்கள் அ.அருணகிரி, பி.ஆா்.ஜி சேகா், வந்தவாசி நகரச் செயலா் பாஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிறைவில் செய்யாறு நகரச் செயலா் கே.வெங்கடேசன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.