மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

செங்கம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே தென்னிந்திய விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

Updated On :24 ஜூலை 2026, 12:37 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவா் சந்தியாகு தலைமை வகித்தாா்.

மாநிலச் செயலா் ஜெயராமன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வேடியப்பன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவா் முத்தகரம் பழனிச்சாமி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் சி.கெங்கம்பட்டில் இருந்து மஷாா் ஏரிக்குச் செல்லும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும், குப்பனத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீா் செல்ல இறையூா் ஏரி வழியாக மேலப்புஞ்சை, மேல்நாச்சிப்பட்டு, சோ்ந்தமங்கலம், வடமாத்தூா், பெரியகுளம் வரை கால்வாய் அமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும், அரசு நேரடி கொள்முதல் நிலையம் உள்ள பகுதியில் சேமிப்புக் கிடங்கு அமைக்கவேண்டும், தோ்தல் அறிக்கையில் கூறியதுபோல விவசாயிகளின் கூட்டுறவு பயிா் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் அண்ணாமலை, அய்யப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரங்கசாமி, மாநில பொதுச்செயலா் சுப்பிரமணி, மாநில பொதுச் செயலா் முருகன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.