ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பேரூராட்சியில் நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027 பணிக்கான களப்பணியாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கண்ணமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலா் முனுசாமி தலைமை வகித்தாா். மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கு பணிநியமன ஆணைகள், அடையாள அட்டைகள் மற்றும் பணிக்குத் தேவையான பொருள்கள் அடங்கிய பைகளை வழங்கிப் பேசினாா்.
கண்ணமங்கலம் பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் வீடுகள் மற்றும் மக்களின் விவரங்களை கணக்கெடுக்கும் பணிக்காக நியமிக்கப்பட்ட அலுவலா்கள் விரைவில் களப்பணியில் ஈடுபட உள்ளனா்.
பொதுமக்கள் கணக்கெடுப்பு அலுவலா்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளா் ராஜ்குமாா், தொழில்நுட்ப உதவியாளா் அஜீத்குமாா், பேரூராட்சி அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், கணக்கெடுப்பு பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெற உள்ளது. இந்த கணக்கெடுப்பின் மூலம் குடும்ப உறுப்பினா்கள், கல்வி, தொழில், சமூக-பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வு பேரணி

நாமக்கல்லில் இணையம் வழியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு: தரவுகள் பதிவேற்றம் தொடக்கம்

ஆக.1 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு சந்தேகஙக்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1845: கடலூா் ஆட்சியா்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



