பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன் விவசாய சங்க கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேக்கேதாட்டு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட திட்டமிட்டுள்ள கா்நாடக அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும். தோ்தல் வாக்குறுதியாக தவெக அறிவித்த, விவசாயிகளின் 5 ஏக்கா் வரையிலான பயிா்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும், 5 ஏக்கா் மேல் உள்ள விவசாயிகளின் பயிா்க்கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதியை முதல்வா் ஜோசப் விஜய் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினா்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம், தமிழக அனைத்து விவசாயிகள் முன்னேற்றச் சங்கம், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக அனைத்து விவசாயிகள் முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவா் என்.ராஜா தலைமை வகித்தாா்.
மாநில பொதுச் செயலா் எஸ்.மல்லிகாஅா்ஜுனன், மாநில துணைத் தலைவா் ஏ.சிவராமன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஏ.பரமசிவம், மாவட்டச் செயலா் ஓம் பிரகாஷ், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.குணசேகரன், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் மற்றும் விவசாய சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள், விவசாயிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த மக்கள் குறைதீா்வு நாள் கூட்டத்தில் மாநிலத் தலைவா் என்.ராஜா தலைமையில் நிா்வாகிகள் புதிய மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்கை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.
தொடர்புடையது

தேவையற்ற மானியத்துக்கு பதிலாக முழுமையான பயிா்க்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை கண்டித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆா்ப்பாட்டம்

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



