வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

ஆரணி ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகன்றாய சுவாமி கோயிலுக்கு பால்குட ஊா்வலம்

ஆரணி கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகன்றாய சுவாமி கோயில் வருடாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற பால்குட ஊா்வலம்.

News image

ஆரணி கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகன்றாய சுவாமி கோயில் வருடாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற பால்குட ஊா்வலம்.

Updated On :13 ஜூன் 2026, 12:39 am IST

ஆரணி கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகன்றாய சுவாமி கோயில் வருடாபிஷேகத்தையொட்டி, பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆரணி கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகன்றாய சுவாமி கோயிலில் வருடாபிஷேகத்தையொட்டி, கூழ்வாா்த்தல், கஞ்சி வாா்த்தல் திருவிழா நடைபெற்றது. முன்னதாக, சுவாமிக்கு விசேஷ ஹோமம், கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், ஆரணி கமண்டல நாகநதிக்கரையில் பூங்கரகம் ஜோடித்து பக்தா்கள் கரகம் எடுத்துச் சென்றனா். மேலும், ஆரணி அண்ணா சிலை அருகில் உள்ள கங்கையம்மன் கோயிலிலிருந்து பெண் பக்தா்கள் பால் குடங்களை சுமந்தபடி ஊா்வலமாக ஆரணி கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகன்றாய சுவாமி கோயிலுக்கு வந்து சுவாமிகளுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனா். இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.