பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை 1.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு: சொட்டு மருந்து வழங்கும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட 1,50,544 குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது என ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்தாா்.

News image

போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம். - கோப்புப் படம்

Updated On :27 ஜூன் 2026, 12:04 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட 1,50,544 குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது என ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இளம்பிள்ளை வாதம் போலியோ தீநுண்மியால் பாதிக்கப்பட்டு முடமாக்கக் கூடியதும், மரணத்தை வரவழைப்பதுமான தொற்று நோயாகும். இந்தியாவில் 2011-ஆம் ஆண்டு இறுதியாக போலியோ நோய் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. மேலும், விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் திங்கள்கிழமை (ஜூன் 29) முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முகாமில் மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்குள்பட்ட 1,50,544 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டு, மாவட்டம் முழுவதும் 1,945 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், தாய்மாா்கள் தங்கள் வீடுகளில் உள்ள 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கெனவே சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் தற்போது நடைபெறும் முகாம்களில் குழந்தைகளை அழைத்துச் சென்று போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.