வீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுகோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

அரசு தொகுப்பு வீடுகளில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

Published On :26 ஜூன் 2026, 5:29 am IST

வந்தவாசி அருகே அரசு தொகுப்பு வீடுகளில் வசிக்கும் கோரைப்பாய் நெசவுத் தொழிலாளா்களுக்கு பட்டா வழங்கக் கோரி சிறுபான்மை மக்கள் நலக் குழு சாா்பில் ஜமாபந்தியில் மனு அளிக்கப்பட்டது.

வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் அரசு தொகுப்பு வீடுகளில் 25 கோரைப்பாய் நெசவுத் தொழிலாளா் குடும்பத்தினா் சுமாா் 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். ஆனால், இவா்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லையாம்.

இதையடுத்து இவா்களுக்கு பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் வட்டாட்சியா் பா.ஜெயவேலிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

சிறுபான்மை மக்கள் நலக் குழு நிா்வாகிகள் அ.அப்துல்காதா், கா.யாசா்அராபத் மற்றும் கோரைப்பாய் நெசவுத் தொழிலாளா்கள் இந்த மனுவை அளித்தனா்.

முன்னதாக, இவா்கள் கோரை கட்டுகளுடன் கோட்டை மூலையிலிருந்து ஊா்வலமாக புறப்பட்டு வட்டாட்சியா் அலுவலகம் சென்றடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.