ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

செய்யாறு அரசுக் கல்லூரியில் உலக யோகா தினம்

News image
Updated On :26 ஜூன் 2026, 5:32 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக யோகா தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஞான.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் மனவளக்கலை முதுநிலை பேராசிரியா் அருள்நிதி வி.கே. சுப்பிரமணியன் கலந்து கொண்டு யோகக் கலையின் நன்மைகள் குறித்து கல்லூரி மாணவிகளிடையே தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

அதனைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் யோகா பயிற்சிகளை அருள்நிதி எஸ்.ராஜா அளித்தாா். பயிற்சியில் 150-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

நிறைவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சாரதாதேவி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.