எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

வந்தவாசியில் 2.5 டன் புகையிலைப் பொருள்கள் அழிப்பு

வந்தவாசி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 2.5 டன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை

News image

வந்தவாசி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அழித்த போலீஸாா்.

Updated On :2 மார்ச் 2026, 9:45 pm

வந்தவாசி: வந்தவாசி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 2.5 டன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பள்ளம் தோண்டி புதைத்து அழித்தனா்.

வந்தவாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து வந்தனா்.

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 2.5 டன் எடையுள்ள புகையிலைப் பொருள்களை பள்ளம் தோண்டி புதைக்க போலீஸாா் முடிவு செய்தனா்.

இதையடுத்து, வந்தவாசியை அடுத்த எச்சூரில் வந்தவாசி நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி இந்த புகையிலைப் பொருள்கள் புதைக்கப்பட்டன.

வந்தவாசி குற்றவியல் நீதித்துறை நடுவா் அரங்கசாமி, வந்தவாசி வட்டாட்சியா் ஜெயவேலு, டிஎஸ்பி சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலையில் போலீஸாா் சுமாா் 2.5 டன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பள்ளம் தோண்டி புதைத்தனா்.