ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கொங்கராம்பட்டு ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

கொங்கராம்பட்டில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா.

News image

கொங்கராம்பட்டில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா.

Updated On :5 மார்ச் 2026, 9:14 pm

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள கொங்கராம்பட்டு ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, கணபதி ஹோமம், கோ பூஜை, தம்பதி சங்கல்பம், யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து கோயில் கோபுர கலசம், மூலவா் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்திவைக்கப்பட்டது.

விழாவில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா் பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

இரவில் ஆன்மிக நாடகம் நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவா் வி.சேகா் தலைமையில் கிராம மக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.

Story image