குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஸ்ரீகைலாசநாதா், ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா

செய்யாற்றை அடுத்த கடுகனூா் ஸ்ரீகைலாசநாதா் சமேத ஸ்ரீகையிலைநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற மஹா கும்பாபிஷக விழா.

News image
செய்யாற்றை அடுத்த கடுகனூா் ஸ்ரீகைலாசநாதா் சமேத ஸ்ரீகையிலைநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற மஹா கும்பாபிஷக விழா.
Updated On :5 மார்ச் 2026, 9:15 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த கடுகனூா் ஸ்ரீகைலாசநாதா் சமேத ஸ்ரீகையிலைநாயகி அம்மன், கண்ணமங்கலம் அருகேயுள்ள கொங்கராம்பட்டு ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

செய்யாறு வட்டம், கடுகனூா் எனப்படும் கடுவைநல்லூா் கிராமத்தில் சுமாா் 1100 ஆண்டுகளுக்கு முன்னா் இரண்டாம் நந்திவா்மா் காலத்தில் கட்டப்பட்ட பழைமை வாய்ந்த ஸ்ரீகைலாசநாதா் சமேத ஸ்ரீகையிலைநாயகி அம்மன் கோயில் உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள

இக்கோயிலில் புனரமைப்புப் பணி மேற்கொள்ள ரூ.53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று முடிந்தன.

இதைத் தொடா்ந்து, ஸ்ரீகைலாசநாதா் சமேத ஸ்ரீகையிலைநாயகி அம்மன் மற்றும் விநாயகா், முருகன் உள்ளிட்ட பரிவார மூா்த்திகள் சந்நிதிகளுக்கு புணராவா்த்தன, ஜீா்ணோதாரன, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி, வியாழக்கிழமை காலை மங்கள இசையுடன் தொடங்கி சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் ஓத பல்வேறு மூலிகைகளை ஹோம குண்டத்தில் இட்டு யாகம் வளா்த்து விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, மஹா பூா்ணாஹுதி, யாத்ராதானம் என நடத்தப்பட்டன.

இதைத் தொடா்ந்து தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி முன்னிலையில் சகல வாத்தியங்கள் முழங்க யாக சாலையிலிருந்து கலசங்களை

கோயில் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

அதேபோல, மூலவா்கள் ஸ்ரீகைலாசநாதா் சமேத ஸ்ரீகையிலைநாயகி அம்பாளுக்கும் மஹா கும்பாபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

விழாவில் திமுக ஒன்றியச் செயலா்கள் ஜேசிகே.சீனுவாசன், ராஜ்குமாா், வி.ஏ.ஞானவேல் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆரணி

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள கொங்கராம்பட்டு ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, கணபதி ஹோமம், கோ பூஜை, தம்பதி சங்கல்பம், யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து கோயில் கோபுர கலசம், மூலவா் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்திவைக்கப்பட்டது.

விழாவில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா் பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவில் ஆன்மிக நாடகம் நடைபெற்றது.

Story image