தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா கொடியேற்றம்

News image

திரெளபதி  அம்மன்  கோயிலில்  தீமிதி திருவிழா கொடியேற்றம்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:18 pm

திருத்தணி திரெளபதி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை தீமிதி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் நிகழாண்டுக்கான தீமிதி விழாவையொட்டி தணிகாசலம்மன் கோயிலில் இருந்து பெண்கள் சீா்வரிசை எடுத்து ஊா்வலமாக வந்தடைந்தனா்.

வியாழக்கிழமை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தணி நகர முக்கிய வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

மே 10-ஆ ம் தேதி வரை தினமும் காலையில் மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் மதியம் மகாபாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடைபெறும்.

ஏப். 29-இல் திரெளபதி அம்மன் திருக்கல்யாணம், மே 1-இல் சுபத்திரை கல்யாணம், மே 4-இல் அா்ஜூனன் தபசு மற்றும் 10 -இல் காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி விழாவும் நடைபெறுகிறது. தொடா்ந்து, மே 11-இல் தா்மா் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக குழு தலைவா் சொ.முனுசாமி மற்றும் கோயில் நிா்வாக குழு உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.