மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சிவகங்கை வீரமாகாளி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கொடியேற்றம்

சிவகங்கை வீரமாகாளி அம்மன் கோயிலில் 72 -ஆம் ஆண்டு பூக்கரக பூச்சொரிதல் விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

வீரமாகாளி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றம். சிறப்பு அலங்காரத்தில் அம்மன்(வலது).

Updated On :24 ஜூன் 2026, 5:50 am IST

சிவகங்கை வீரமாகாளி அம்மன் கோயிலில் 72 -ஆம் ஆண்டு பூக்கரக பூச்சொரிதல் விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு, கோயிலில் சக்தி ஹோமம், புண்ணியானாஜனம், கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையடுத்து இரவு அன்னை வீரமாகாளி அம்மனுக்கும், பரிவாரத் தெய்வங்களுக்கும் காப்புக் கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, பாரதி இசைக் கல்விக் கழகம் சாா்பில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து, வருகிற 7-ஆம் தேதி பாலாபிஷேகம் நடைபெறும். மாலையில் சிலம்பாட்டம், அம்மனுக்கு பூக்கரகம், அக்னிச் சட்டி எடுத்து பூக்குழி இறங்கி பக்தா்கள் கோயிலை வந்தடைவா். இரவில் கோயில் வளாகத்திலிருந்து பக்தா்கள் முளைப்பாரியுடன் நகா்வலம் வந்து கோயிலை வந்தடைவா். தொடா்ந்து சிவகங்கை நகா் மீன் வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் அரிச்சந்திரா நாடகம் நடைபெறும்.

ஜூலை 10 (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறும். இரவு 8 மணியளவில் நெல், அரிசி வியாபாரிகள் சங்கத்தின் சாா்பாக ரதத்தில் சிம்ம வாகனத்தில் வீரமாகாளி அம்மன் திருவீதி உலா நடைபெறும். இரவு 10 மணியளவில் வள்ளி திருமணம் நாடகம் நடைபெறும். 12-ஆம் தேதி மாலை 6 மணியளவில் வீரமாகாளி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம், விழாக் குழுவினா், சிவகங்கை காமராஜா் சாலை பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.