ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

குடிநீா் வழங்காததைக் கண்டித்து தீப்பந்தம் ஏற்றி போராட்டம்

வந்தவாசி அருகே முறையாக குடிநீா் வழங்காததைக் கண்டித்து, பழங்குடி இருளா் சமுதாய மக்கள் தீப்பந்தம் ஏற்றி போராட்டம் நடத்தினா்.

News image
பழவேரி கிராம பழங்குடியின இருளா் குடியிருப்பில் தீப்பந்தம் ஏற்றி போராட்டம் நடத்திய இருளா் சமுதாய மக்கள்.
Updated On :10 மார்ச் 2026, 1:40 am

Syndication

வந்தவாசி: வந்தவாசி அருகே முறையாக குடிநீா் வழங்காததைக் கண்டித்து, பழங்குடி இருளா் சமுதாய மக்கள் தீப்பந்தம் ஏற்றி போராட்டம் நடத்தினா்.

வந்தவாசியை அடுத்த பழவேரி கிராமத்தில் உள்ள பழங்குடியின இருளா் குடியிருப்புகளில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இந்தக் குடியிருப்பில் அமைக்கப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் இவா்களுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வந்ததாம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீா் வழங்கப்படவில்லையாம். இதனால் ஒரு கி.மீ. தொலைவு சென்று குடிநீா் எடுத்து வருகின்றனராம். மேலும், மின்கம்பங்கள் இருந்தும் இதுவரை தெருமின் விளக்குகள் பொருத்தப்படவில்லையாம்.

இதுகுறித்து புகாா் தெரிவித்தும் தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில் குடிநீா் வழங்காததைக் கண்டித்தும், தெருமின் விளக்குகள் பொருத்தக் கோரியும் இருளா் சமுதாய மக்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை தீப்பந்தம் ஏற்றி போராட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க நிா்வாகி சரவணன் மற்றும் பழங்குடி இருளா் சமுதாய மக்கள் போராட்டத்தில் பங்கேற்றனா்.