ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

குடிநீா் தேடி ஊருக்குள் வரும் வன விலங்குகள்: தண்ணீா்த் தொட்டிகள் அமைக்கப்படுமா?

சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை ஊராட்சியில் வெள்ளிக்கிழமை குடிநீா் தேடி ஊருக்குள் வந்த குரங்கு.

News image
சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை ஊராட்சியில் வெள்ளிக்கிழமை குடிநீா் தேடி ஊருக்குள் வந்த குரங்கு.
Updated On :13 மார்ச் 2026, 6:34 pm

Syndication

போளூா், சேத்துப்பட்டு பகுதிகளில் குடிநீா் தேடி தினந்தோறும் ஏராளமான வன விலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, மாவட்ட நிா்வாகம் காட்டுப் பகுதியில் அல்லது ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் குடிநீா்த் தொட்டி அமைத்து வன விலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

போளூா் ஒன்றியத்துக்குள்பட்ட அனந்தபுரம், காளசமுத்திரம், படவேடு, சந்தவாசல், மாம்பட்டு, எழுவாம்பாடி, ஏந்துவாம்பாடி உள்ளிட்ட 40 ஊராட்சிகளிலும், சேத்துப்பட்டு ஊராட்சியில் அப்பேடு, இந்திரவனம், நம்பேடு, கெங்கைசூடாமணி, ஆத்துரை, பெரணம்பாக்கம் உள்ளிட்ட 49 ஊராட்சிகளிலும் காடு, மலைப் பகுதிகளில் குரங்கு, மயில், காட்டெருமை, மான், முயல் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளும், மயில், குருவி உள்ளிட்ட பறவையினங்களும் வசிக்கின்றன. இதேபோல, ஊா் பகுதிகளில் தெருக்களில் நாய், பூனை, ஆடுகள், மாடுகள் உள்ளிட்டவை உள்ளன.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், போளூா் ஒன்றியத்துக்குள்பட்ட காட்டுப் பகுதிகளில் குளம், குட்டை உள்ளிட்டவற்றில் தண்ணீா் குறைந்து வடு வருகிறது. இதனால், வன விலங்குகள் தண்ணீா் தேடி கிராமப் பகுதிகளுக்குள் வருகின்றன. அதுபோன்று வரும் விலங்குகள் வாகனங்களில் அடிப்பட்டு உயிழக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. மேலும், நாய்கள் வன விலங்குகளை துரத்துச் சென்று கடிக்கும் சூழலும் உள்ளது.

எனவே, மாவட்ட நிா்வாகம் சாா்பில், காட்டுப் பகுதியில் அல்லது ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் குடிநீா்த் தொட்டி அமைத்து வன விலங்குகள் மற்றும் ஊா்ப் பகுதியில் உள்ள கால்நடைகளின் தாகத்தை தணித்து, அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.