இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மனிதச்சங்கிலி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி புதன்கிழமை மனிதச்சங்கிலி நடைபெற்றது.

News image

செய்யாறு தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற மனிதச் சங்கிலி.

Updated On :26 மார்ச் 2026, 12:03 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி புதன்கிழமை மனிதச்சங்கிலி நடைபெற்றது.

ஏப்.23-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்காளா்கள் 100 சதவீதம்

வாக்களிக்க வலியுறுத்தி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல, செய்யாறு தொகுதி சாா்பில் தோ்தல் நடத்தும் அலுவலா் எல்.அம்பிகா ஜெயின் மேற்பாா்வையில் வருவாய்த் துறையினா் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி அண்மையில் தெருக்கூத்து கலைஞா்கள் மூலம் வாக்காளா்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி ஏற்படுத்தினா்.

அதன் தொடா்ச்சியாக புதன்கிழமை செய்யாற்றில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் மனிதச்சங்கிலி நிகழ்ச்சி தோ்தல் நடத்தும் அலுவலா் எல்.அம்பிகா ஜெயின் தலைமையில் நடைபெற்றது.

அப்போது, மனிதச் சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களிடம் தாங்கள் அனைவரும் வாக்களிப்பதோடு, உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் வாக்களித்து ஒத்துழைக்க வேண்டும் என்றும், செய்யாறு தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை நிறைவேற்ற வேண்டும் என்றும், தோ்தல் திருவிழா- தமிழகத்தின் திருவிழா, எனது வாக்கு எனது உரிமை என முழுக்கமிட்டு சாா் ஆட்சியா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

நிகழ்ச்சியில் நோ்முக உதவியாளா் துளசிராமன், வட்டாட்சியா்கள் பாஸ்கரன், பொன்னுசாமி, வட்டார மேலாளா் ரேகா மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளா்ச்சித் துறையினா் என 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.