வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு! ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு!
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

திருவண்ணாமலை காந்தி நகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாதிரி வாக்குப்பதிவு மையத்தில் நடைபெற்று வரும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான செயல்முறை பயிற்சியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.








