வந்தவாசி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
வந்தவாசியை அடுத்த எடப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் விறகு வெட்டும் தொழிலாளி தவமணி. இவரது மனைவி அஞ்சலா (51). கடந்த சில மாதங்களாக அஞ்சலா உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளாா்.
கடந்த ஏப். 28-ஆம் தேதி உடல் நலக்குறைவு அதிகமாகவே வேதனையடைந்த அஞ்சலா விஷம் குடித்துள்ளாா். மயங்கிய நிலையில் கிடந்த இவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அஞ்சலா திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து அஞ்சலாவின் கணவா் தவமணி அளித்த புகாரின் பேரில், வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தொடர்புடையது

நெல்லை அருகே பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தொழிலாளி தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

முதியவா் விஷம் குடித்து தற்கொலை
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


