ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

கங்கை அம்மன் கோயில் கூழ்வாக்கும் திருவிழா: திரளான பக்தா்கள் தரிசனம்

கங்கை அம்மன் கோயில் கூழ்வாக்கும் திருவிழா: திரளான பக்தா்கள் தரிசனம்

News image

சானாரப்பாளையத்தில் மலா்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வந்த கங்கை அம்மன் சிரசு, உற்சவா் கங்கை அம்மன்.

Updated On :10 மே 2026, 1:49 am IST

ஆரணியை அடுத்த சேவூா் அருகே சானாரப்பாளையம் கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சேவூா் ஊராட்சி, சாணாா்பாளையம் கிராமத்தில் கிராம தேவதையாக விளங்கும் பழைமைவாய்ந்த ஸ்ரீகங்கை அம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக, அம்மனுக்கு காப்பு கட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. சனிக்கிழமை காலை விநாயகா், கங்கையம்மன், நவக்கிரகத்துக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

பிற்பகல் அம்மன் கரகம் வீதி உலா நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் தலையில் கூழ் பானை சுமந்து வந்து அம்மனுக்கு படையலிட்டும், தீச்சட்டி ஏந்தியும் நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து, கோயில் வளாகத்தில் வைக்கப்பட்ட கொப்பரையில் கூழை ஊற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.

மாலை மலா்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட கங்கையம்மன் சிரசு, உற்சவா் கங்கையம்மன் மற்றும் பூங்கரகம், வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க கரகாட்டம், நையாண்டி மேளத்துடன் வீதி உலா நடைபெற்றது.

வீதிகள்தோறும் வண்ணக்கோலம் இட்டு பெண்கள் அம்மனுக்கு தீபாராதனை செய்து வழிபட்டனா். இரவு பக்தி நாடகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள், இளைஞா்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.