நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

போளூரில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம்

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம்.

News image

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம்.

Updated On :15 மே 2026, 7:00 am IST

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மக்கள் நலப் பணியாளா்கள் மற்றும் ஊக்குநா்களுக்கு நடைபெற்ற இந்த திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாமுக்கு

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேஸ்வரி, ஆனந்தன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் ராணி, மாவட்ட மேலாண்மை அலகு சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வாணி வரவேற்றாா்.

பயிற்சி முகாமை மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ஜோசப்கிறிஸ்துராஜ் தொடங்கிவைத்தாா்.

முகாமில் பயிற்சியாளரும், வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளருமான காந்திமதி பேசுகையில், போளூா் ஒன்றியத்தில் 40 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சியில் உள்ள கிராமங்களில் 4 வகையான கலரில் சேமிக்கும் கலன்கள் வழங்கப்படும். இந்த கலன்களில் ஈரக்கழிவுகள், உலா் கழிவுகள், சுகாதாரக் கழிவுகள், சிறப்பு கவனக் கழிவு என தனித்தனியாக கழிவுகளைப் பெற்று பாதுகாப்பாக ஊருக்கு வெளியே சேகரிக்கவேண்டும்.

மேலும் பொதுவெளியில் வீசவோ, எரிக்கவே, புதைக்கவோ கூடாது. பாதுகாப்பாக பிரித்தெடுக்கவேண்டும். கிராமங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டாா்.

40 ஊராட்சியைச் சோ்ந்த மக்கள் நலப் பணியாளா்கள், ஊக்குநா்கள் கலந்துகொண்டனா்.