விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

கழிவுகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பதிவு செய்வது கட்டாயம்: திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா்

பெருமளவு கழிவுகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மாநகராட்சி இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் எஸ்.செல்வபாலாஜி உத்தரவிட்டாா்.

News image

திடக்கழிவு மேலாண்மை விதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டவா்களுக்கு வழங்கப்பட்ட மஞ்சப்பை

Updated On :1 மணி நேரம் முன்பு

பெருமளவு கழிவுகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மாநகராட்சி இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் எஸ்.செல்வபாலாஜி உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பெருமளவு கழிவுகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் சங்கத் தலைவா்களுடன் திடக்கழிவு மேலாண்மை விதிகள் குறித்த விழிப்புணா்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் எஸ்.செல்வபாலாஜி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆணையா் செல்வபாலாஜி பேசியதாவது: திருவண்ணாமலை மாநகராட்சியில் பெருமளவு கழிவுகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மாநகராட்சி இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தினசரி 100 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட திடக்கழிவு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் 20 ஆயிரம் சதுர மீட்டா் அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட நிறுவனங்கள் தினசரி 40 ஆயிரம் லிட்டா் அல்லது அதற்கு மேற்பட்ட நீரினை பயன்படுத்தும் நிறுவனங்கள் பெருமளவில் கழிவுகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் என திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ன்படி கூறப்பட்டுள்ளது.

தங்களது நிறுவனங்களில் உருவாக்கும் கழிவுகளை தங்கள் வளாகத்திலேயே தரம் பிரித்து ஈர கழிவுகளை உரமாக்க வேண்டும். மக்காத குப்பைகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.

மேலும், வீடுகளில் உருவாக்கும் கழிவுகளான மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதார கழிவுகள் மற்றும் சிறப்பு பராமரிப்பு கழிவுகள் என 4 வகைகளாக தரம் பிரித்து மாநகராட்சி தூய்மைப் பணியளா்களிடம் தனித்தனியாக கொடுக்க வேண்டும் என்றாா். தொடா்ந்து கூட்டத்தில் கலந்துகொண்டவா்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் மஞ்சப்பை வழங்கப்பட்டது.

இதில் தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்க மாநில துணைத் தலைவா் ராஜசேகரன், மாவட்டத் தலைவா் எஸ்.டி.தனகோட்டி, திருவண்ணாமலை தாலுக்கா வியாபாரிகள் சங்கத் தலைவா் நாகராஜன், பூ மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவா் வி.எம்.சண்முகம், மாநகரட்சி துப்புரவு அலுவலா் செல்வராஜ், துப்புரவு ஆய்வாளா்கள் ரமணன், பிரகதீஸ்வரன் மற்றும் தூய்மை பாரத திட்ட பணியாளா்கள் கலந்துகொண்டனா்.