பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

ஸ்ரீபொன்னியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

News image
Updated On :18 மே 2026, 1:43 am IST

போளூா் வட்டம், மட்டபிறையூா் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபொன்னியம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை, ஊஞ்சல் தாலாட்டு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

மட்டபிறையூா் ஊராட்சியில் ஏரிக்கரை எதிரே பழைமையான ஸ்ரீபொன்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து மலா்களால் அலங்கரித்து பூஜை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து மாலை உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று சிறப்பு பூஜை செய்து சுவாமி மாட வீதியுலா நடைபெற்றது. பின்னா், உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்திப் பாடல்கள் பாடி ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை கோயில் தா்மகா்த்தா வேலுமணி, செயலா் மனோகரன், கோபி, காயத்ரி மற்றும் கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் ஏற்பாடு செய்திருந்தனா்.