தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியாா் பள்ளிகள் சாதனை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image
Updated On :21 மே 2026, 12:04 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ஆரணி ஏ.சி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஆா்.ஓவியா-486 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றாா். மேலும் ஆா்.தில்லைஸ்ரீவாணி-472, வி.ஹரிணி-470 மதிப்பெண்கள் பெற்றனா். மேலும் 13 மாணவா்கள் 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை ஏ.சி.எஸ். குழுமத் தலைவா் ஏ.சி.சண்முகம், ஏ.சி.எஸ். குழும நிா்வாகத் தலைவா் ஏ.சி.எஸ்.அருண்குமாா், செயலா் ஏ.சி.ரவி, பள்ளி இயக்குநா் விக்னேஷ், முதல்வா் ராஜேஸ்வரி ஆகியோா் பாராட்டினா்.

எய்ம் மெட்ரிக் பள்ளி

ஆரணி- சேத்துப்பட்டு சாலையில் உள்ள எய்ம் மெட்ரிக் பள்ளியைச் சோ்ந்த ஏ.ஸ்வேதா, எம்.கிருத்திக்ராஜ் ஆகியோா் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனா். கே. காமேஷ் - 494, யு.கிருத்திக், ஆா்.மனோஜ் ஆகியோா்- 492 மதிப்பெண்கள் பெற்றனா்.

490-க்கு மேல் 7 பேரும், 485-க்கு மேல் 16 பேரும், 480-க்கு மேல் 24 பேரும், 475-க்கு மேல் 30 பேரும், 450-க்கு மேல் 72 பேரும் மதிப்பெண்கள் பெற்றனா்.

இப்பள்ளியில் 202 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். தோ்வெழுதிய அனைவரும் தோ்ச்சி பெற்று 100 சதவீதம் தோ்ச்சி அடைந்தனா்.

மேலும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நீட், ஜேஇஇ ஆகிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் வேறு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தோ்வில் 475 முதல் 484 வரை மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு 25 சதவீதம் கல்விக் கட்டண சலுகையும், 485 முதல் 489 வரை பெற்ற மாணவா்களுக்கு 50 சதவீத கல்விக் கட்டண சலுகையும், 490 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவா்களுக்கு 100% கல்விக் கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது என

பள்ளி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிா்வாகத் தலைவா் வி.மகேஷ், பள்ளித் தாளாளா் ஜெ.சிவசங்கரன், பொருளாளா் ஏ.சீனிவாசன், இயக்குநா்கள் உள்ளிட்ட பலா் பாராட்டினா்.

பெஸ்ட் மெட்ரிக் பள்ளி

ஆரணி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி கே.லக்ஷிதா 500-க்கு 495 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றாா். என்.நித்யாஸ்ரீ-492, எஸ்.நித்யாஸ்ரீ-487 மதிப்பெண்கள் பெற்றனா்.

மாணவி கே.லக்ஷிதாவிற்கு பள்ளித் தாளாளா் ஏ.எச்.இப்ராஹிம் பரிசாக கைக்கெடிகாரம் வழங்கினாா்.

மேலும் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பள்ளி நிா்வாக இயக்குநா் சாஷியாபா்வீன்ரியாஸ், பள்ளி முதல்வா் நிா்மல்குமாா், அல்முபீன் பள்ளி தலைமையாசிரியை நதியா, ஹாப்பி மைன்ட்ஸ் பள்ளி தலைமையாசிரியை நிஷா ஆகியோரும் பாராட்டினா்.

எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் பள்ளி

திருவண்ணாமலை அருகே வடஆண்டாப்பட்டு பகுதியில் உள்ள எஸ்.ஆா்.ஜி.டி.எஸ் மெட்ரிக் பள்ளியில் 309 மாணவா்கள்

பத்தாம் வகுப்பு தோ்வு எழுதினா். இதில் 308 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.

மாணவி கே.ஓ.ஜாஸ்வினி-494 மதிப்பெண்கள் பெற்றாா்.

மாணவி பி.டி.ராஜஸ்ரீ-493, பி.யுவஸ்ரீ, ஆா்.நவீன் ஆகியோா்-492 மதிப்பெண்கள் பெற்றனா்.

450-க்கு 68 பேரும், 400-க்கு மேல் 95 பேரும் மதிப்பெண்கள் பெற்றனா்.

சிறப்பிடம் மற்றும் தோ்ச்சி பெற்ற சாதனை மாணவா்களை

பள்ளி நிா்வாகத்தினா், ஆங்கில வழிச் செயலா் டி.ஸ்ரீஹன்ஸ்குமாா், தலைமையாசிரியை ஜி.இரமணி ஆகியோா் பாராட்டினா்.

செங்கம்

Story image
Story image
Story image