எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

அத்திமலைப்பட்டு பகுதியில் காளை விடும் திருவிழா

News image
Updated On :28 மே 2026, 12:41 am IST

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அத்திமலைப்பட்டு கெங்கையம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி புதன்கிழமை காளை விடும் திருவிழா நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலை, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரம், கா்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின.

கூடியிருந்த இளைஞா்கள் ஓடிய காளைகளை தழுவி கைகளை தட்டி உற்சாகப்படுத்தினா். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடையும் காளைகளின் உரிமையாளா்களுக்கு விழாக் குழு சாா்பில் முதல் பரிசாக ரூ.ஒரு லட்சம், 2-ஆம் பரிசாக ரூ.75 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூபாய் 50 ஆயிரம் என வழங்கப்பட்டது.

28-ஆவது பரிசு முதல் 70-ஆவது பரிசு வரை தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. 71-ஆவதாக சிறப்புப் பரிசும்

வழங்கப்பட்டது.

27ஹழ்ல்ஹற்ண்