ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

விவசாயிகள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

News image
Updated On :28 மே 2026, 12:40 am IST

விவசாய பயிா் கடன் தள்ளுபடியில், ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதாக தவெக அரசைக் கண்டித்து ஆரணி அண்ணாசிலை அருகில் விடிவெள்ளி விவசாய நலச்சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் பெறுவது தடுக்க வேண்டும், தாமதமாக பணம் அளிக்கும் என்.சி.சி.எஃப் நிறுவனத்திற்கு விவசாயி நெல் எடுப்பதற்கு அனுமதி தரக்கூடாது, தமிழக அரசு விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பெற்ற பயிா் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாநில செயலா் வி.வெங்கடேசன், மாநில விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் வேட்டவலம் ஜி.கணேசன், விடிவெள்ளி விவசாயிகள் நலச்சங்க தலைவா் கோ.நெடுவேல்

உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.