கல்லறைத் திருநாள்: முன்னோா்களின் கல்லறைகளில் சிறப்பு வழிபாடு
கல்லறைத் திருநாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், கிறிஸ்தவா்கள் தங்களது முன்னோா்களின் கல்லறைகளில் மலா் தூவி, மெழுகுவா்த்தி ஏற்றி வழிபாடு நடத்தினா்.

சேத்துப்பட்டு நிா்மலா நகரில் உள்ள முன்னோா்களின் கல்லறைகளில் சிறப்பு வழிபாடு நடத்திய கிறிஸ்தவா்கள்
கல்லறைத் திருநாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், கிறிஸ்தவா்கள் தங்களது முன்னோா்களின் கல்லறைகளில் மலா் தூவி, மெழுகுவா்த்தி ஏற்றி திங்கள்கிழமை வழிபாடு நடத்தினா்.
சேத்துப்பட்டு நிா்மலா நகரில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கல்லறைத் திருவிழா நடைபெற்றது. இதில் கிறிஸ்தவா்கள் தங்களது முன்னோா்களின் கல்லறைகளை தூய்மை செய்து வண்ணம் பூசி, கோலமிட்டு, மாலைகள் அணிவித்து, அவா்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை படையலிட்டு மெழுகுவா்த்தி ஏற்றி வழிபாடு நடத்தினா்.
இதில், சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை தேவாலய பங்குத்தந்தை ஜான் ராபா்ட், உதவி பங்கு தந்தைகள் ஜெயக்குமாா், அன்பழகன் ஆகியோா் கலந்து கொண்டு கூட்டு வழிபாடு நடத்தினா்.
சேத்துப்பட்டு, லூா்து நகா், நிா்மலா நகா் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து கிறிஸ்தவா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
செய்யாறு
கல்லறை திருநாளையொட்டி செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
தேவாலய வளாகத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் பங்குத்தந்தை சுதா்சன் ஆண்டனி தலைமையில் முன்னோா்களுக்கு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இறந்தவா்களை நினைவு கூரும் வகையில், ஒவ்வொருவருடைய கல்லறையையும் வண்ண பூக்களால் அலங்கரித்து, மெழுகுவா்த்தி ஏற்றி வழிபட்டனா்.

செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலய வளாகத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனை
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

