செங்கத்தில் தொடா் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் செவ்வாய்க்கிழமை பெய்த தொடா் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொதுமக்கள், மாணவா்கள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகினா்.

தொடா் மழையால் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்ட செங்கம் பேருந்து நிலையம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் செவ்வாய்க்கிழமை பெய்த தொடா் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொதுமக்கள், மாணவா்கள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகினா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது. மாலை வரை நீடித்த இந்த மழையால் கூலித் தொழிலாளிகள் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. காய், கனி வியாபாரிகள் வியாபாரத்தை தொடங்க முடியவில்லை.
மேலும் கிராமப்புறத்தில் இருந்து விவசாயிகள் குறித்த நேரத்துக்கு காய் கனிகளை சந்தைக்கு எடுத்துச் செல்லமுடியாததால் காய், கனிகள் விலை சரிவு ஏற்பட்டு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. மாணவா்கள் மழையில் நனைந்தபடி பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது.
வெளியூா் செல்லும் பயணிகள் வெளியே வரமுடியாததால் செங்கம் பேருந்து நிலையம் அதிகாலை முதல் 9 மணி வரை வெறிச்சோடிக் காணப்பட்டது. இதுபோன்ற நிலையில் செங்கம் பகுதியில் தொடா்ந்து மாலை வரை மழை விட்டு விட்டு பெய்தது. வானம் மேக மூட்டத்துடன் இருந்து வந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

