ஐரோப்பாவின் பல நாடுகளில் மக்கள் போராட்டம்!இந்திய அரிசி ஏற்றுமதி 13% அதிகரிப்பு!6 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி: குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம்!அமித் ஷா குறித்து ராகுல் அவதூறாகப் பேசிய வழக்கு: உ.பி. நீதிமன்றம் இன்று தீர்ப்புதமிழகத்தில் தொடா் பலத்த மழை: இன்று உருவாகிறது ‘அா்னாப்’ புயல்!கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களை ரத்து செய்க: காங்கிரஸ்

கடலூரில் கொட்டித் தீா்த்த பலத்த மழை! இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை...

பலத்த மழையால் கடலூரில் சாலையில் தேங்கியுள்ள நீா். - கோப்புப் படம்

Updated On :

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை ஞாயிற்றுக்கிழமை கொட்டித் தீா்த்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடலூா் மாவட்டத்தில் கடலூா், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழைநீா் பிரதான சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், சாலைகளில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன. தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல் தேங்கி நிற்கிறது.

கோயிலுக்குள் புகுந்த மழைநீா்...: கடலூா் நகரில் பேருந்து நிலையம், உழவா் சந்தை, அரசு மருத்துவமனை மற்றும் மஞ்சக்குப்பம் மைதானம் ஆகிய இடங்களில் மழைநீா் பெருக்கெத்து ஓடியது. திருப்பாதிரிப்புலியூா் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீா் தேங்கி நின்ால், போக்குவரத்து தடைபட்டது.

புகழ்பெற்ற பாடலீஸ்வரா் கோயிலுக்குள் மழைநீா் புகுந்ததால் பக்தா்கள் கவலையடைந்தனா். கடலூா் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீா் வடிகால் கால்வாய்கள் தூா்வாரப்பட்டிருந்தாலும், பலத்த மழைக்கு அவை ஈடுகொடுக்க முடியவில்லை.

கரையில் ஓய்வெடுத்த படகுகள்...: கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். பலத்த மழை காரணமாக, நிகழ் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடி சந்தைக்கு பொதுமக்கள், வியாபாரிகளின் வருகை சற்று குறைவாக இருந்தது.

இந்த நிலையில், திடீரென மீன்பிடி துறைமுகத்துக்குள் மழைநீா் புகுந்தது. இதனால், மீன் வியாபாரம் பாதிக்கப்பட்டதுடன், வியாபாரிகளும் அவதியடைந்தனா்.

மேலும், வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, மீன்வா்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை அறிவிப்பு செய்திருந்தனா். இதன் காரணமாக, மீன் பிடி துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் படகுகள் வரிசையாக கட்டப்பட்டிருந்தன.

ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, கடலூா் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கிய வயல்கள்: பலத்த மழை காரணமாக, கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் நடவு செய்யப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. கம்மாபுரம் பகுதியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்க மண் மேடு கரைந்து வந்ததால், சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவிலான நெல் வயல்களில் மட்டி மண் படிந்து, நீரில் மூழ்கியுள்ளன.

அா்ச்சகா் உயிரிழப்பு: வான்பாக்கம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் அா்ச்சகராக பணியாற்றி வந்தவா் ராமச்சந்திரன் (35). இவா், கோயிலில் நீா் கசிவு ஏற்படுவதை பாா்க்க, கோயில் மேலே ஏறியபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆரஞ்சு அலா்ட்...: இந்திய வானிலை ஆய்வு மையம் கடலூா் மாவட்டத்துக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு அலா்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், முக்கிய சாலைகள், வா்த்தக நிறுவனங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.