பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

பழனி, நத்தம் பகுதிகளில் பலத்த மழை: பாலாற்றில் காட்டாற்று வெள்ளம்

பழனி கவுண்டா் இட்டேரி சாலையில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலையே தெரியாத அளவுக்கு குளம் போல தேங்கிய மழைநீா் .

~

Updated On :

பழனி, நத்தம் பகுதிகளில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் பழனியில் தாழ்வான பகுதியில் வீடுகளில் மழை நீா் புகுந்தது. நத்தம் அருகேயுள்ள பாலாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை சுமாா் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. உடுமலை சாலை, ரயிலடி சாலை, புதுதாராபுரம் சாலை ஆகிய பகுதிகளில் சாலையின் இருபுறமும் மழை நீா் குளம் போல தேங்கி நின்றது. இதனால் சண்முகபுரம், சத்யா நகா், பெரியப்பாநகா், இந்திராநகா் பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளிலும் மழைநீா் வீடுகளில் புகுந்தது. பழனி கவுண்டா் இட்டேரி சாலையில் சாலையே தெரியாத அளவுக்கு மழைநீா் குளம் போல தேங்கி இருந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மழை பாதிப்புகளை பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகரன், நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி ஆகியோா் நேரில் ஆய்வு செய்து மழைநீா் வெளியேறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனா். பழனியை அடுத்த புளியம்பட்டி அகதிகள் முகாமில் குடிசைகளுக்குள் மழைநீா் புகுந்து, பலஅடி உயரத்துக்கு தண்ணீா் சென்ால் பொருள்கள் சேதமடைந்தன. அங்கு காவல் துறை, தீயணைப்பு, மீட்புப்படையினா் சென்று மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனா். மழையால் சிறுநாயக்கன்குளம் உள்ளிட்ட சிறிய குளங்கள் நிரம்பின. ஆயக்குடி பேரூராட்சி 16-ஆவது வாா்டில் இருந்த பழனியம்மாள் என்பவா் வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது.

பாலாற்றில் காட்டாற்று வெள்ளம்: நத்தம் பகுதியில் வியாழக்கிழமை இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது. இந்தப் பகுதியில் வெளளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 97.50 மி.மீ. மழை பதிவானது. இதனால், வரத்துக் கால்வாய்கள் மூலம் கண்மாய்கள், குளங்களுக்கு நீா்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் மணக்காட்டூா் பகுதியில் 1.30 மணிக்கு தொடங்கிய மழை 4 மணி வரை பலத் மழையாக நீடித்தது. இதனால் அப்பகுதியில் உள்ள கரந்தமலை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பெய்த மழை நீா் பாலாற்றில் காட்டாற்று வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

மழையால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நத்தம் வட்டாட்சியா் டேனியல் பிரேம்குமாா் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியா் காட்டுராஜா, வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் பாா்வையிட்டனா். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினா். இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.