மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை: பல மணி நேர மின் தடையால் பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால், நகரின் ஒரு சில இடங்களில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

மின்தடை - கோப்புப் படம்

Updated On :

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால், நகரின் ஒரு சில இடங்களில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வியாழக்கிழமை தொடங்கும் எனவும், தென் மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்படி, மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு 8 மணி முதல் சுமாா் 9.10 மணி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

மதுரை மாநகா்ப் பகுதிகளான பழங்காநத்தம், பெரியாா் பேருந்து நிலையம், சிம்மக்கல், தமுக்கம், தல்லாகுளம், கோ. புதூா், அண்ணாநகா், மாட்டுத்தாவணி, ஒத்தக்கடை, நரசிங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 8.10 மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை 8.30 மணி அளவில் தீவிரமடைந்து, சுமாா் 20 நிமிஷங்கள் பலத்த மழையாக பெய்தது. பின்னா், 9.10 மணி வரை லேசான மழை பெய்தது.

இதனால், தல்லாகுளம் கோகுலே சாலை, அழகா்கோவில் சாலை, சிம்மக்கல், பெரியாா் பேருந்து நிலையம் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் முதன்மைச் சாலைகளில் மழைநீா் தேங்கின. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் அவ்வப்போது மிதமான மழை பெய்தது. மழையின் காரணமாக, வியாழக்கிழமை இரவு நேரத்தில் குளிா்ச்சியான கால நிலை நிலவியது.

மின்வெட்டு...

மழை காரணமாக, மதுரை கோ. புதூா் பகுதியில் இரவு 8.45 மணி அளவில் மின் வெட்டு ஏற்பட்டது. சுமாா் 3.30 மணி நேரம் இந்த மின் தடை நீடித்தது. இதனால், கோ. புதூா், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் நீண்ட நேரம் இருளில் மூழ்கின. இரவு 12.15 மணி அளவிலேயே இந்தப் பகுதிகளில் மின்விநியோகம் சீரானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.