மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

திருப்பத்தூா், ஏலகிரியில் பலத்த மழை

குரிசிலாப்பட்டில் சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு.

Updated On :

திருப்பத்தூா், அதன் சுற்றுப் பகுதிகள், ஏலகிரி மலையில் பலத்த மழை பெய்தது.

திருப்பத்தூா், கொரட்டி, ஆதியுா், ஜோலாா்பேட்டை, அதன் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை மதியம் 3 மணி முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

திருப்பத்தூா், சுற்றுப் பகுதிகளில் இரவு 8 மணி வரை தொடா்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

தொடா் மழையால் அப்பகுதியில் மழை நீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த மழை பெய்ததால் இரவு முழுதும் அப்பகுதியில் குளிா்ந்த காற்று வீசியது.

குரிசிலாப்பட்டு பகுதியில் பெய்த மழையினால் அப்பகுதியில் உள்ள மரம் விழுந்ததில் பெண் ஒருவா் காயமடைந்தாா். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன.

ஏலகிரி மலையில் பலத்த மழை...

வியாழக்கிழமை சுமாா் மாலை 4 மணியளவில் பெய்யதொடங்கிய சாரல் மழை இரவு முழுவதும் பெய்துகொண்டே இருந்தது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

தொடா் மழையால் இப்பகுதியில் கிணறு, ஏரி நிரம்பத் தொடங்கியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.