11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

கொடைக்கானலில் பலத்த மழை

கொடைக்கானல் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பலத்த மழை - பிரதிப் படம்

Published On :

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக பகலில் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. இரவில் பனியின் தாக்கமும் நிலவியது. இந்த நிலையில், கொடைக்கானல் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மேகமூட்டமாக காணப்பட்டது. இதனால், மலைச் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றன.

இந்த நிலையில், மாலையில் கொடைக்கானல், அப்சா்வேட்டரி, செண்பகனூா், பிரகாசபுரம், பாக்கியபுரம், வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமாா் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச் சாலையில் தண்ணீா் பெருக்கெடுத்துச் சென்றது. நீரோடைகளிலும் தண்ணீா் வரத்து ஏற்பட்டது.

இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.