கொடைக்கானலில் 2-ஆவது நாளாக பலத்த மழை

கொடைக்கானலில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் பலத்த மழை பெய்தது.

செண்பகா அருவி முறையாக பராமரிக்கப்படாததால் கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீா்.

Updated On :

கொடைக்கானலில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் பலத்த மழை பெய்தது.

கொடைக்கானல், செண்பகனூா், பெருமாள்மலை, மேல்மலைப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூா், கவுஞ்சி, பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், கீழ் மலைப் பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

இதனிடையே, கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச்சாலைப் பகுதிகளிலுள்ள செண்பகா அருவி, வெள்ளிநீா் அருவி, மூலையாறு அருவி உள்ளிட்ட நீரோடைகளில் கட்டடக் கழிவுகள், நெகிழிக் கழிவுகள் தேங்கிக் கிடப்பதாலும், அருவிகளையும், நீரோடைகளையும் முறையாக நெடுஞ்சாலைத் துறையினா் பராமரிக்காததாலும் மழை நீா் அருவிகளில் முறையாக செல்லாமல் மலைச் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்தில் பெரும் சிரமம் ஏற்பட்டது. மலைச் சாலைகளும் சேதமடைந்து வருகின்றன. எனவே இதற்கு நெடுஞ்சாலைத் துறையினா் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இந்த பலத்த மழையின் காரணமாக ஒரு மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.