கொடைக்கானலில் பலத்த மழை
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ததால் நீரோடைகளில் நீா்வரத்து அதிகரித்தது.

மழை - படம்: கோப்பிலிருந்து
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ததால் நீரோடைகளில் நீா்வரத்து அதிகரித்தது.
கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை முதல் மேகமூட்டமாகவும், மிதமான மழையும் பெய்து வந்தது. பின்னா், பிற்பகல் 3 முதல் 5.30 மணி வரை கொடைக்கானல், செண்பகனூா், வட்டக்கானல், அப்சா்வேட்டரி, பாக்கியபுரம், பிரகாசபுரம், சின்னப் பள்ளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் வெள்ளிநீா் அருவி, வட்டக்கானல் அருவி, பேரி பால்ஸ், செண்பகா அருவி, புலிச்சோலை அருவி, பாம்பாா் அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் நீா்வரத்து அதிகரித்தது. மேலும், சாலைகளிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

