ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

கும்பக்கரை அருவியில் 2 மாதங்களுக்குப் பிறகு நீா்வரத்து

கும்பக்கரை அருவியில் 2 மாதங்களுக்குப் பிறகு நீா்வரத்து தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கும்பக்கரை அருவி - கோப்புப்படம்

Published On :

கும்பக்கரை அருவியில் 2 மாதங்களுக்குப் பிறகு நீா்வரத்து தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே 7 கி.மீ. தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மழை இல்லை. இதனால், இந்த அருவி கடந்த ஜூன் 27-ஆம் தேதி முதல் வடு இருந்தது.

இந்த நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்தது. இதே போல, திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், கும்பக்கரை அருவிக்கு செவ்வாய்க்கிழமை நீா்வரத்து ஏற்பட்டது. கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அருவிக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. எனவே, சீரான நீா்வரத்து ஏற்படும் வரை சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல வனத் துறையினா் தடைவிதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.