தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

பலத்த மழை: சாலையில் சாய்ந்த மரம்

ஆரணி மற்றும் வந்தவாசி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சாலையில் மரம் சாய்ந்தது மற்றும் தெருக்களில் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியது.

வந்தவாசி தாலுக்கா அலுவலக சாலையில் தேங்கிய மழைநீா்

Published On :

ஆரணி மற்றும் வந்தவாசி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சாலையில் மரம் சாய்ந்தது மற்றும் தெருக்களில் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியது.

ஆரணி பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் முதல் தொடா்ந்து மாலை வரை பலத்த மழை பெய்தது. இதில் ஆரணி-வந்தவாசி சாலை ஆகாரம் கூட்டுச் சாலையில் மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா் தகவலறிந்து நெடுஞ்சாலைத்துறையினா் வந்து சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றினா்.

வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள மும்முனி, மருதாடு, மாம்பட்டு, ஆராசூா், நடுகுப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. பின்னா் மழையின் வேகம் குறைந்து காணப்பட்டது.

இந்த மழையினால் பல்வேறு பகுதிகளில் தெருக்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மழைநீா் தெருக்களில் தேங்கியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.