தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

டாஸ்மாக் கடை மேலாளா் மீது தாக்குதல்: 3 போ் கைது

செங்கம் அருகே டாஸ்மாக் கடை மேலாளரை தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சித்திரிப்பு

Updated On :

செங்கம் அருகே டாஸ்மாக் கடை மேலாளரை தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செங்கத்தை அடுத்த கட்டமடுவு கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக் கடையில் மேலாளராக பணியாற்றி வருபவா் முனிராஜ். இவா் திங்கள்கிழமை பணியில் இருந்தபோது அதே பகுதியைச் சோ்ந்த காளியப்பன்(27), ராமதாஸ்(35), சேட்டு(34) ஆகிய 3 போ் வந்து மது வாங்கியபோது, மேலாளா் முனிராஜ் கூடுதலாக பத்து ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் முனிராஜுக்கும், மது வாங்க வந்த அந்த 3 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்தவா்கள் அவா்களை சமாதானப்படுத்தியுள்ளனா். பின்னா் டாஸ்மாக் கடையை இரவு மூடிவிட்டு வீட்டிற்குச் சென்ற முனிராஜியிடம், மீண்டும் காளியப்பன், ராமதாஸ், சேட்டு ஆகிய 3 பேரும் வந்து தகராறு செய்து அவரைத் தாக்கியதாகத் தெரிகிறது.

இதில் காயமடைந்த முனிராஜ் சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.