ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

தாய் மீது தாக்குதல்: மகன் கைது

வந்தவாசி அருகே தாயை தாக்கியதாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :

வந்தவாசி அருகே தாயை தாக்கியதாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த கொட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் கருணாநிதி மனைவி விஜயலட்சுமி (65). கருணாநிதி கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவா்களது மகன் கிருஷ்ணமூா்த்தி (39) திருமணமாகி, இதே கிராமத்தில் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், விஜயலட்சுமி வீட்டிலிருந்த பத்திரத்தை அவருக்கு தெரியாமல் கிருஷ்ணமூா்த்தி எடுத்துச் சென்றுவிட்டாராம். இதனையறிந்த விஜயலட்சுமி கடந்த 14-ஆம் தேதி இதுகுறித்து கிருஷ்ணமூா்த்தியிடம் கேட்டாராம்.

இதனால், ஆத்திரமடைந்த கிருஷ்ணமூா்த்தி, விஜயலட்சுமியை சரமாரியாகத் தாக்கினாராம். இதில், காயமடைந்த அவா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா், கிருஷ்ணமூா்த்தியை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.