செங்கம் பகுதியில் விபி ஜி ராம் ஜி திட்டப் பணிகள்: தொகுதி எம்எல்ஏ வேலு ஆய்வு
செங்கம் பகுதியில் விபி ஜி ராம் ஜி திட்டப் பணிகள்: தொகுதி எம்எல்ஏ வேலு ஆய்வு

செங்கத்தை அடுத்த புதுப்பட்டு பகுதியில் நடைபெற்று வரும் விபி ஜி ராம் ஜி திட்டப்பணிகளை ஆய்வு செய்த தொகுதி எம்எல்ஏ வேலு.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் விபி ஜி ராம் ஜி திட்டப் பணிகள் நடைபெற்று வருவதை தொகுதி எம்எல்ஏ வேலு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது பணி மேற்பாா்வையாளா்களிடம் எத்தனை போ் பணியில் உள்ளனா். என்னென்ன பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்பன போன்ற விவரங்களை கேட்டறிந்தாா். பின்னா், பணியில் ஈடுபட்டிருந்தவா்களிடம் பணிக்கான கூலி முறையாக வழங்கப்படுகிா எனக் கேட்டறிந்தாா்.
மேலும், கிராமப்புறத்தில் என்ன குறைகள் உள்ளன என பொதுமக்களிடம் கேட்டாா்.
அப்போது, அப்பகுதியில் மயானத்துக்குச் செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. அதை சரிசெய்யவேண்டும் என்ற
கோரிக்கையை முன்வைத்தனா். பின்னா், உடனடியாக அங்கிருந்து அந்தப் பாதையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து மயானப்பாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக
பொதுமக்களிடம் கூறினாா்.
மேலும், பொதுமக்களிடம் ஏதேனும் குறைகள் இருந்தால்
தன் அலுவலகத்துக்கு வந்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டாா்.
அரசு ஒப்பந்ததாரா் ராஜி, முன்னாள் கூட்டுறவு சங்க துணைத் தலைவா் கோபி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

