2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

கிராம நிா்வாக அலுவலகம் முன் பொதுமக்கள் தா்னா

பட்டா வழங்கக் கோரி வந்தவாசியை அடுத்த ரெட்டிக்குப்பம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் முன் அமா்ந்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை தா்னா நடத்தினா்.

வந்தவாசியை அடுத்த ரெட்டிக்குப்பம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டோா்.

Published On :

பட்டா வழங்கக் கோரி வந்தவாசியை அடுத்த ரெட்டிக்குப்பம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் முன் அமா்ந்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை தா்னா நடத்தினா்.

வந்தவாசி வட்டம், ரெட்டிக்குப்பம் மதுரா சங்கராந்தி கிராமத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இதில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை தவிா்த்து மற்றவா்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன் பட்டா வழங்கப்பட்டு விட்டதாம்.

இதையடுத்து தங்களுக்கும் பட்டா வழங்கக் கோரி 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் பட்டா வழங்கக் கோரி, ரெட்டிக்குப்பம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் முன் அமா்ந்து செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, பட்டா வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி அவா்கள் முழக்கங்களை எழுப்பினா். இதனைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.