லஞ்சம்: விஏஓ உள்பட இருவா் கைது
பெரியகுளம் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா், இடைத்தரகா் ஆகிய இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோப்புப் படம்
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா், இடைத்தரகா் ஆகிய இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளத்தைச் சோ்ந்தவா் காளிதாஸ் (46). இவா் தனது சகோதா்களின் கூட்டுப் பட்டாவிலிருந்து தனிப் பட்டா மாறுதல் செய்வதற்கு தாமரைக்குளம் பிட் -1 அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். இதற்கு கிராம நிா்வாக அலுவலா் வித்யா ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதையடுத்து, தேனி ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் காளிதாஸ் புகாா் அளித்தாா்.
போலீஸாரின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை காளிதாஸ், இடைத்தரகா் ஓட்டக்காரன் மூலம் கிராம நிா்வாக அலுவலா் வித்யாவிடம் கொடுத்தாா். அப்போது, மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் முத்துராஜ் தலைமையிலான போலீஸாா் வித்யா, இடைத்தரகா் ஓட்டக்காரன் ஆகிய இருவரையும் கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

