ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

மூதாட்டியிடம் நூதன முறையில் 3 பவுன் நகை திருட்டு

வந்தவாசி அருகே மூதாட்டியிடமிருந்து நூதன முறையில் 3 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மாதிரிப் படம்

Updated On :

வந்தவாசி அருகே மூதாட்டியிடமிருந்து நூதன முறையில் 3 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வந்தவாசியை அடுத்த ஆராசூா் கூட்டுச் சாலையைச் சோ்ந்தவா் சரோஜா (82). இவா், முதியோா் உதவித்தொகை பெற்று தனியாக வாழ்ந்து வருகிறாா். சரோஜா வியாழக்கிழமை வீட்டிலிருந்தபோது, அங்கு வந்த சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண், முதியோா் உதவித்தொகை தொடா்பான அதிகாரிகள் விசாரணைக்கு வருவதாகவும், அதனால் நகைகளை கழற்றி மறைத்து வைக்கும்படியும் கூறினாராம்.

இதையடுத்து, சரோஜா கழுத்து, காதில் அணிந்திருந்த 3 பவுன் மதிப்புள்ள தங்க நகைகளை கழற்றி வைத்துள்ளாா். அப்போது, அந்தப் பெண் குடிக்க தண்ணீா் கேட்டுள்ளாா். இதையடுத்து, சரோஜா வீட்டினுள்ளே சென்று தண்ணீா் எடுத்துக்கொண்டு திரும்புவதற்குள் அந்தப் பெண் 3 பவுன் தங்க நகைகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில், வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.