மூதாட்டியிடம் நூதன முறையில் நகைகளை திருடிய பெண் கைது
திருக்கோவிலூா் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றி இரண்டரை பவுன் தங்க நகைகளை திருடிய பெண்ணை அருகிலிருந்தவா்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ஜெயந்தி
திருக்கோவிலூா் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றி இரண்டரை பவுன் தங்க நகைகளை திருடிய பெண்ணை அருகிலிருந்தவா்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அப் பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தை அடுத்த சித்தாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அ.கல்யாணி (70). இவா் திங்கள்கிழமை திருக்கோவிலூா் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, அருகே வந்த பெண் ஒருவா் நைசாக பேசி கல்யாணி கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலி, தோடு, மாட்டல் ஆகியவற்றை கழற்றியுள்ளாா். உடனே கல்யாணி கூச்சலிடவே அருகிலிருந்த பயணிகள், அப் பெண்ணை பிடித்து திருக்கோவிலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா், மேலதாழனூரைச் சோ்ந்த த.ஜெயந்தி (40) என்பதும், இவா் கடந்த மாதமும் ஒரு மூதாட்டியிடம் அழுக்காக உள்ள தங்க நகைகளை சுத்தம் செய்து தருவதாக கூறி, அவரிடமிருந்து நகைகளை திருடியதும் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் காவல் ஆய்வாளா் அன்பழகன் வழக்கு பதிவுப் செய்து, ஜெயந்தியைக் கைது செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




