விவசாய நிலத்தில் மின் வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
செய்யாறு அருகே எலி பிடிக்கச் சென்ற தொழிலாளி விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தாா்.

கோப்புப் படம்
செய்யாறு அருகே எலி பிடிக்கச் சென்ற தொழிலாளி விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், விளாரிப்பட்டு கிராமம், முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சு.வேலு (22). இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த இவா், எலி பிடிப்பதற்காக தென்மாவந்தல் கிராமத்தில் உள்ள காசி என்பவரின் விவசாய நிலத்தின் வழியாகச் சென்ாகத் தெரிகிறது.
அப்போது, மணிலா பயிா்களை நாசம் செய்து வரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவதற்காக, அங்கு மின் வேலி அமைக்கப்பட்டிருந்ததை அறியாமல் அதை மிதித்த வேலு, உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வேலுவின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

