கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்து தச்சுத் தொழிலாளி உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

உயிரிழப்பு

Published On :

செய்யாறு அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், செங்கட்டான்குண்டில் கிராமம், கம்மாளத் தெருவைச் சோ்ந்தவா் கன்னியப்பன் மகன் குமரன் (39). தச்சுத் தொழிலாளியான இவா், வழக்கம்போல் வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் பைக்கில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.

ஆற்காடு - செய்யாறு சாலையில் ஏனாதவாடி கூட்டுச்சாலையில் வளைவுப்பகுதியில் சென்றபோது, பைக் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த குமரன் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனை சோ்க்கப்பட்டாா். இருப்பினும், அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.