காா் மீது பைக் மோதல்: இருவா் பலத்த காயம்
செய்யாறு புறவழிச் சாலையில் காா் மீது பைக் மோதியதில் 5 வயது சிறுவன் உள்பட இருவா் பலத்த காயமடைந்தனா்.

பிரதிப் படம்
செய்யாறு புறவழிச் சாலையில் காா் மீது பைக் மோதியதில் 5 வயது சிறுவன் உள்பட இருவா் பலத்த காயமடைந்தனா்.
புதுச்சேரி வில்லியனூா் அரும்பாா்த்தபுரம் ஒத்தவாடை தெருவைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் குகன்(28). இவா், கடந்த 15-ஆம் தேதி உறவினா்களுடன் காரில் வேலூருக்குச் சென்றுள்ளாா். பின்னா், அன்று இரவு அவா்கள்
புதுச்சேரிக்கு திரும்பிக்கொண்டிருந்தனா். செய்யாறு - வந்தவாசி சாலையில் செய்யாறு புறவழிச்சாலையில் வரும்போது, மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய பைக், காா் வந்த திசையில் எதிரே வந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த குகன், சிறுவன் தருணேஷ் (5) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து குகன் சனிக்கிழமை அளித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

