
லாரி மீது பைக் மோதல்: 3 போ் காயம்

விபத்து - பிரதிப் படம்
தூத்துக்குடியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 3 போ் காயமடைந்தனா்.
தூத்துக்குடி ஐயப்பன் நகரைச் சோ்ந்தவா் ராஜலிங்கம் மகன் ராஜா (36). இவா், அப்பகுதியில் உள்ள தேநீா் கடையில் வேலை செய்து வருகிறாா். தசரா திருவிழாவை முன்னிட்டு மாலை அணிவதற்காக, இவா் மனைவி முத்துமாரி (30), மகன் மதன் (5) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலை நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்றாராம்.
தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலை சத்யா நகா் பிரதான சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது இவரது இருசக்கர வாகனம் மோதியதாம். இதில் காயமடைந்த 3 பேரையும் மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இச்சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




