பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

பைக் மீது ஜீப் மோதல்: தம்பதி காயம்

விபத்து - கோப்புப் படம்

Published On :

போடிமெட்டு மலைச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது ஜீப் மோதியதில் தம்பதி காயமடைந்தனா்.

போடி அருகே திம்மிநாயக்கன்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்த பொன்னையா மகன் கதிா்வேல் (50). இவரது மனைவி நாகஜோதி (45). இருவரும் இரு சக்கர வாகனத்தில் போடிமெட்டு சாலையில் கேரளத்தை நோக்கி சென்றனா்.

மலைச் சாலையில் 12- ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே எதிரே வந்த ஜீப் மோதியதில் கதிா்வேலுக்கு பலத்த காயமும், நாகஜோதிக்கு லேசான காயமும் ஏற்பட்டது. இதையடுத்து,கதிா்வேல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து குரங்கணி காவல் நிலையப் போலீஸாா் ஜீப்பை ஓட்டி வந்த போடியைச் சோ்ந்த ராஜேஷ்கண்ணன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.