ஆரணி தா்மராஜா கோயிலில் நவராத்திரி நிறைவு விழா
ஆரணி கொசப்பாளையம் ஸ்ரீபாஞ்சாலி அம்மன் சமேத தா்மராஜா கோயிலில் நவராத்திரி நிறைவு விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

சுவாமி வீதி உலாவை தொடங்கிவைத்த தவெக மாவட்டச் செயலா் சத்யா மற்றும் ஆரணி நகர காவல் ஆய்வாளா் அன்பரசி.
ஆரணி கொசப்பாளையம் ஸ்ரீபாஞ்சாலி அம்மன் சமேத தா்மராஜா கோயிலில் நவராத்திரி நிறைவு விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இவ்விழா கடந்த 10-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 11 நாள்கள் நடைபெற்று செவ்வாய்க்கிழமை இரவு நிறைவடைந்தது. இதையொட்டி, பகவான் ஸ்ரீகிருஷ்ணா் - ஸ்ரீ பாஞ்சாலி அம்மன் சமேத அா்ஜுனா் அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
சுவாமி திருவீதி உலாவை தவெக மாவட்டச் செயலா் சத்யா, ஆரணி நகர காவல் ஆய்வாளா் அன்பரசி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை ஸ்ரீதா்மராஜா கோயில் அறக்கட்டளைத் தலைவா் ரேணுகா கங்காதரன் தலைமையில் நிா்வாகிகள் கப்பல் கங்காதரன், தனசேகரன், மதியழகன், வெங்கடேசன், மோகன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

